சாளக்ராமம் என்பது கண்டகி நதியில் கிடைக்கும் பலவிதமான வடிவங்களும், நிறங்களும் கொண்ட கற்களாககும். இவை திருமாலின் அம்சமாகவும், தெய்வத்தன்மை கொண்டதாகவும் கருதப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
மூலவர் ஸ்ரீமூர்த்தி, முக்தி நாராயணன் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு ஸ்ரீதேவி நாச்சியார் என்பது திருநாமம். ஸ்ரீராமாநுஜர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம். பிரம்மா, ருத்ரர் மற்றும் கண்டகி ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இங்கு கிடைக்கும் சாளக்கிராமங்களில் வெண்மை நிற சாளக்கிராமம் வாசுதேவன் வாசம் செய்யும் இடமாகவும், கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு வாசம் செய்யும் இடமாகவும், பச்சை நிறம் ஸ்ரீமந் நாராயணன் வாசம் செய்யும் இடமாகவும், பசும்பொன் நிறம் ஸ்ரீநரசிம்மர் வாசம் செய்யும் இடமாகவும், மஞ்சள் நிறம் வாமனர் வாசம் செய்யும் இடமாகவும், கருநீல சாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ணர் வாசம் செய்யும் இடமாகவும் கருதப்படுகின்றது.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களும், பெரியாழ்வார் 2 பாசுரங்களுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|